Wednesday, April 11, 2012

டைட்டானிக் - புதைந்த வரலாறு













உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது.
1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பிரமாண்ட கப்பல்:
டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல். 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி (269 மீ) நீளம், 175 அடி (53.3மீ) உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம்.
சம்பவத்தன்று...
1912, ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயார்க்கை நோக்கி, கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது. கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர். மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.
வியாபாரமான டைட்டானிக்:
விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.
1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் செய்கிறது.
டைட்டானிக் 2:
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

No comments:

Post a Comment